காங்கிரஸ் கட்சியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸார்.

by Staff / 20-03-2023 11:14:57am
காங்கிரஸ் கட்சியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸார்.

மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முன்னிலையில் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. கார்த்திகேயன் அவர்கள் ஏற்பாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அ. இ. அ. தி. மு. க கட்சியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தனர்.முன்னாள் மதுரை மாநகராட்சி உறுப்பினரும், நியமனக்குழு தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளருமான. சிலுவை அவர்கள் தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தனர்.இந்நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via

More stories