கவின் குடும்பத்திற்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்-கனிமொழி. 

by Staff / 31-07-2025 10:22:08am
கவின் குடும்பத்திற்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்-கனிமொழி. 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை தமிழ்செல்வியின் மகன் ஐடி ஊழியர் கவின் (26) காதல் விவகாரத்தில் கடந்த 27 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று (ஜூலை 31) கவினின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "இப்படியான துயரம் நடக்கக்கூடாது என்பதுதான் சமூகத்தின் உணர்வு. முதல்வரும் கவினின் குடும்பத்துடன் துணை நிற்கிறார். நிச்சயம் நியாயம் கிடைக்கும்" என தெரிவித்தார். 

 

Tags : கவின் குடும்பத்திற்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்-கனிமொழி. 

Share via