125 புதிய மின்சார பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று பூந்தமல்லியில் 125 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை தமிழக துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தாழ்தள பேருந்துகள் இவை என்பதால் முதியவர்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் சிசிடிவி கேமராக்கள், அவசரகால வெளியேறும் வழி, ,ஜிபிஎஸ் கண்காணிப்பு வசதி இடம் பெற்று உள்ளன. பூந்தமல்லி உள்ளிட்ட பணிமனைகளில் இந்த பேருந்துகளுக்காக மின் ஏற்ற நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Tags :


















