தமிழ்நாடு முழுவதும் 97. 37 லட்சம் வாக்காளர் பெயர்கள்  நீக்கப்பட்டுள்ளன. .

by Admin / 19-12-2025 09:21:02pm
தமிழ்நாடு முழுவதும் 97. 37 லட்சம் வாக்காளர் பெயர்கள்  நீக்கப்பட்டுள்ளன. .

தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி சுமார் 97. 37 லட்சம் (97,37,832) வாக்காளர் பெயர்கள்  நீக்கப்பட்டுள்ளன. . முன்பு இருந்த 6.41 கோடி வாக்காளர்களிலிருந்து தற்போது 5. 43 கோடியாக வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு  66.44 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெர்ந்ததின் காரணமாகவும் 26.94 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்து உள்ளதாலும்  3. 98 லட்சம் வாக்காளர்கள் பல இடங்களில் பதிவு செய்ததன் காரணமாகவும் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ,சென்னையில் 14.25 லட்சம் பேரும் கோவையில் 6.5 லட்சம் பேரும் திருப்பூரில்  5.63 லட்சம் பேரும் சேலத்தில் 3.2 லட்சம் பேரும் நீக்கப்பட்டுள்ளனர். தகுதி உள்ள வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு இருந்தால், ஜனவரி 18 2026க்குள் திருத்தத்தை மேற்கொள்ளலாம் என்றும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 2022 வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via