துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயம் ஆக்கியதை கைவிட வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

by Admin / 24-01-2026 10:54:54pm
துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயம் ஆக்கியதை கைவிட வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

 துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயம் ஆக்கிவுள்ளதை உடனடியாக கைவிட வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்எழுதியுள்ளார். கடிதத்தில் தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் வரவிருக்கும் கல்வி ஆண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இடங்களை ஆக்குபேஷன் தெரபி ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளின் சேர்வதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் நீட் பங்கேற்பதை கட்டாயமாக்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள.. இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதனால் அதனை உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வருகிறது என்றும் மற்ற துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் அச்சங்கள் என்று உண்மையாகி விட்டன என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார் எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல் படியாக இரண்டு படிப்புகளுக்கு நீட் தேர்வு பரிந்துரைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார் அரசமைப்புச் சட்டப்படி சுகாதாரம் மற்றும் கல்வியாகிய இரு துறைகளுக்கும் பொறுப்பான மாநில அரசுகளுடன் முறையான கலந்த ஆலோசனைகளை செய்யாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மாநில அரசால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories