கழிவறை கோப்பையில் இருந்து எட்டிப்பார்த்த உடும்பு அதிர்ந்த சுற்றுலாப்பயணிகள்

by Admin / 30-01-2022 02:24:03pm
கழிவறை கோப்பையில் இருந்து எட்டிப்பார்த்த உடும்பு அதிர்ந்த சுற்றுலாப்பயணிகள்

தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை கோப்பையில் இருந்து விஷமுள்ள உடும்பு வெளிவந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தாய்லாந்தில் பந்தும் தானி  என்ற இடத்தில் சுற்றி பார்க்க வந்தனர்.

அங்கு புதிதாக கட்டப்பட்ட ஹோட்டலில் தங்கிய அவர்கள் கழிவறைக்கு சென்ற போது அதன் கோப்பையில் உடும்பு ஒன்று இருப்பதை கண்டனர்.

பொதுவாக ஆசிய நீர் உடும்புகள் லேசான நச்சுத் தன்மை கொண்டவை என்பதால் சுற்றுலாப்பயணிகள் அங்கிருந்து வெளியேறினர்.

ஆனால் உடும்பு மீண்டும் கோப்பைக்குள் பயணித்து கழிவுநீர் குழாய் வழியாக வெளியேறியது
இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஹோட்டலில் இருந்து 
வெளியேறினர்கள் .

 

Tags :

Share via
Logo