தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி பாதுகாப்பு பணியில் 600க்கும் மேற்பட்ட போலீசார்

by Staff / 22-05-2022 02:17:26pm
தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி பாதுகாப்பு பணியில் 600க்கும் மேற்பட்ட போலீசார்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி ஒரு ஆன்மிக விழா என்றும்  அதில் அரசியல் நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டுள்ளார். 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்பதால் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories