பிரதமர் ஏன் இன்னும் சந்திக்கவில்லை - பிரியங்கா காந்தி
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி இந்த வீராங்கனைகளை பற்றி கவலைப்பற்றிருந்தால், அவர் ஏன் இன்னும் இவர்களை சந்தித்து பேசவில்லை என கேள்வியெழுப்பினார். மேலும், இந்த அரசாங்கம் பிரிஜ் பூஷனை ஏன் காப்பாற்றுகிறது என புரியவில்லை என்றார்.
Tags :