நடந்தே லடாக் சென்ற இளைஞர்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நடந்தே லடாக் சென்றுள்ளார். அசன் சோல் நகரைச் சேர்ந்த தேபு முகர்ஜியின் நண்பர்கள் பைக்கில் லடாக் சென்றுள்ளனர். ஆனால், பைக் வாங்க முடியாததால், தேபு அவர்களுடன் செல்லவில்லை. இதனால் தேபு முகர்ஜி லடாக் நோக்கி கால்நடையாக புறப்பட்டார். அவர் 72 நாட்கள் 2,401 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பனிப்பாறைகளில் தேசியக் கொடியை ஏற்றினார். பல நாட்கள் பட்டினியாக நடந்ததாகவும், சாலையோரம் தள்ளு வண்டிகளில் உறங்கியதாகவும் தேபு கூறினார்.
Tags :