பாலியல் புகார் - பாஜக எம்.பி., மீது வழக்கு

by Staff / 29-04-2023 11:57:06am
பாலியல் புகார் - பாஜக எம்.பி., மீது வழக்கு

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பாலியல் குற்றம்சாட்டினர். இந்தப் புகாரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, கடந்த ஏப்.23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இதற்கிடையே பிரிஜ் பூஜன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று டெல்லி போலீசார் பிரிஜ் பூஷன் சிங் மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo