என் தாயின் மீது ஆணையாக சத்தியமாக இதுதான் மேடையில் நடந்தது-தமிழக பள்ளி  கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன்

by Admin / 01-10-2026 07:26:59pm
என் தாயின் மீது ஆணையாக சத்தியமாக இதுதான் மேடையில் நடந்தது-தமிழக பள்ளி  கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன்

 இன்று தமிழக பள்ளி  கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் செய்தியாளர்களை சந்தித்து, நேற்று தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா பேசிக்கொண்டிருந்த போது தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதை தொடர்ந்து சத்யபாமாவின் காதருகேசென்று ,பொதுமக்களும் தலைவரும் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே ,நேரத்தை கருத்தில் கொண்டு உங்கள் உரையை விரைவில் சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் தான் சொன்னேன். எதிர்கட்சிகள் இதனை அழுக்காச்சி நாடக என விமர்சிப்பது தவறானது என்றும் தான் அங்கு வேறு எதுவும் கூறவில்லை என்றும் என் தாயின் மீது ஆணையாக சத்தியமாக இதுதான் மேடையில் நடந்தது என்றும் தெளிவுபடுத்தினார்.வேட்பாளர் சத்தியபாமா உரையாற்றும் பொழுது சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக பேசுபவர்கள் குறித்து அழுததோடு கண்கலங்கியபடி தழதழத்துஇரண்டு மாதங்களாக தனது செல்போனை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாகவும் அதனால் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் பேச முதலமைச்சர் விஜய் அவரது தோள்களை பற்றி ஆறுதல் கூறி தேற்றினார்.

 

Tags :

Share via
Logo