ரூ.10 ஆயிரம் அளித்த  காவலாளியை நேரில் அழைத்து புத்தகம் அளித்து  பாராட்டிய முதல்வர் 

by Editor / 14-05-2021 04:18:04pm
 ரூ.10 ஆயிரம் அளித்த  காவலாளியை நேரில் அழைத்து புத்தகம் அளித்து  பாராட்டிய முதல்வர் 



தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த பணம் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என அவர் உறுதி அளித்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தனியார் தொழில் நிறுவனங்களும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வரும் தங்கதுரை தனது ஒரு மாத சம்பளம் ரூபாய் 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் பணியாற்றி வரும் தங்கதுரைக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. 
சென்னையில் தங்கி பணியாற்றி வரும் அவர், முதல்வரை சந்தித்து தனது சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்துள்ளார். ஆனால், முதல்வரை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். இதையறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின், காவலாளி தங்கதுரையை நேரில் அழைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தனது அலுவலகத்தில் வைத்திருந்த புத்தகம் ஒன்றையும் அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

 

Tags :

Share via