ஓ.பன்னீர்செல்வம் தேதிகளை தெரிவிக்க வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்
முல்லைப்பெரியாறு அணைக்கு 14 முறை சென்றதாக கூறும் எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அந்த தேதிகளை தெரிவிக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் நேற்று முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சிப்பொறுப்பில் இருந்து முல்லை பெரியாறு அணையை ஒருமுறை கூட நேரில் பார்வையிடவில்லை என குற்றஞ்சாட்டினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணைக்கு 14 முறை சென்றதாக கூறுவதாகவும், அப்படியிருந்தால் அந்த விவரம் பொதுப்பணி இலாகா காலண்டரில் பதிவாகியிருக்கும் எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
எனவே ஓ.பி.எஸ் அணைக்கு சென்ற நாள் தேதிகளை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓ.பி.எஸ் முல்லை பெரியாறு அணையில் நீர் திறக்க சென்று, நீரை தொட்டுள்ளாரே தவிர அணையை பார்வையிடவில்லை என துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார். அணை தொடர்பாக கேரளா அரசை எதிர்த்து பெயரளவுக்கு மட்டுமே உச்சநீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்ததாகவும் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.ஆனால் வழக்கு தொடர்பான எண்ணை பெற்றுக்கொண்டு வழக்கினை முடித்து வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags :