சார்பட்டா பரம்பரை படத்திற்குஜெயக்குமார் எதிர்ப்பு- உதயநிதி வரவேற்பு
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியானது. இந்தப் படத்தில் குத்துச்சண்டை போட்டியடன போட்டியில் இரு தரப்பினர் மோதிக் கொள்வதுடன், சமகால அரசியல் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, அவசர நிலை பிரகடனம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி கலைப்பு மற்றும் எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கிறது. அரசியல் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தப் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “சார்பட்டா படத்தில் எம்ஜிஆர் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது, கண்டிக்கத்தக்கது. கலை மூலம் உண்மைகளை மறைப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யம் துரோகம்,” எனக் கூறியுள்ளார்.
அதேவேளையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை பாராட்டி டுவிட் போட்டுள்ளார்.
“70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள 'சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது,” என்று பாராட்டியுள்ளார்.
Tags :