கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்தவர் மீது வழக்கு.
பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை பகுதியில் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கைத்தறி அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஜெயவேல் கணேசன் தலைமையிலான அதிகாரிகள், சென்னிமலையை அடுத்துள்ள சிறுக்களஞ்சி பகுதியில் உள்ள இரண்டு பவர்லூம் தறி குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 விசைத்தறிகளில் கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட பெட்ஷீட் ரகங்கள், உற்பத்தி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், விசைத்தறி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

