விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

by Staff / 16-03-2023 05:43:24pm
விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இபிஎஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினருக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை வழங்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடைத்தவுடன் பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories