ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பகுதியில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெற கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 29 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . எனினும் ஓட்டப்பந்தய வீரர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கடந்த ஜூலை 1 முதலான கொரோனா பாதிப்பு 382 ஆக அதிகரித்துள்ளது . முன்னதாக ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவதற்கு மத்தியில் ஜப்பானில் மேலும் 4 நகரங்களுக்கு கொரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்டது .
Tags :