நண்பரின் தங்கை திருமணத்தில் கலந்து கொள்ள வந்த இளைஞர் குத்தி கொலை:

மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்த சரவணன் மகன் கமலேஷ். பட்டதாரி. இளைஞரான இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் கேஸியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் நண்பரின் தங்கைக்கு நாளை நடைப்பெற உள்ள திருமணமனத்தில் கலந்து கொள்ள வந்தார்.
சிக்கந்தர் சாவடி- அலங்காநல்லூர் மெயின்ரோட்டில் கமலேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது திடீரென கமலேஷை ஒரு கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளைஞரை அப்பகுதியில் உள்ள சிலர் மீட்டு உடனடியாக ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே இளைஞர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், தப்பி ஓடிய மர்மகும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : நண்பரின் தங்கை திருமணத்தில் கலந்து கொள்ள வந்த இளைஞர் குத்தி கொலை: