உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்த மோடி

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்தில் பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 6) திறந்து வைத்தார்.
Tags :