220 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலை அதிகரித்து வருகிறது. கடும் குளிரின் காரணமாக 220 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். பல குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்படவில்லை என்று அரசு தெரிவித்தது. பஞ்சாப் மாகாணத்தில் ஜனவரி 1 முதல் 10,520 நிமோனியா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, உ.பி., ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடும் குளிர், பனி மூட்டம் காணப்படுகிறது.
Tags :