by Staff /
12-07-2023
04:14:10pm
மதுரை அருகே திருநகரில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியிலிருந்த பெண் மயங்கி விழுந்தவர் பலியானார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே பசுமலை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுஜிதா (35). இவர் திருநகரில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுஜிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவருடைய கணவர் ஆறுமுகம் திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Tags :
Share via