இரவு பணியில் ஈடுபட்டு இருந்த மின்பாதை ஆய்வாளர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் துணை மின் நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த மின்பாதை ஆய்வாளரை அலுவலகத்திற்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஆனந்த பாண்டி கடந்த 5 ஆண்டுகளாக மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. காலையில் பணிக்கு வந்த லைன் மேன் பூமிநாதன் ஆனந்த பாண்டியன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளைஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Tags :