சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதி

by Staff / 26-07-2024 04:43:20pm
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதி

சதுரகிரி மலைப்பாதையில் யானை, சிறுத்தை, கரடி, புலிகள் வன விலங்குள் நடமாட்டம் இருப்பதால் சதுரகிரி மலைப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழா நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா - கடந்த ஆண்டு மாரடைப்பால் பக்தர் உயிரிழப்பு எதிரொலி - இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 5 ஆம் தேதி வரை  இருதயவியல் மருத்துவர்கள் குழு  சதுரகிரி மலையடிவாரத்தில் அமைப்பு

தாணிப்பாறை மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் இருதயவியல் மருத்துவர்கள் கொண்ட குழுவினரை 24 மணி நேரமும் அமைக்க உத்தரவு.பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா அடுத்த மாதம்  ஆகஸ்ட் 4 ஆம் தேதி வர உள்ள நிலையில் திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்

ஆடி அமாவாசை திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற நிலையில் ஆடி அமாவாசை விழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம்.

மலைப்பாதைகளில் அனுமதி இன்றி கடைகள் அமைக்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.மலைப்பாதைகளில் நடந்து செல்லும் பக்தர்களுடைய விழிப்புணர்வி ஏற்படுத்தும் வகையில் மைக் மூலமாக அறிவிப்பு வெளியிட ஏற்பாடு

 

Tags :

Share via