தவெகவின் 3ம் கட்ட கல்வி விருது விழா!

by Staff / 13-06-2025 10:16:29am
தவெகவின் 3ம் கட்ட கல்வி விருது விழா!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வந்தார். அந்த வகையில் இந்தாண்டு முதற்கட்டமாக 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருது வழங்கும் விழா கடந்த 30ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து, 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் கடந்த ஜுன் 4ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தற்போது தொடங்கியுள்ளது. இவ்விழாவில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

 

Tags : தவெகவின் 3ம் கட்ட கல்வி விருது விழா!

Share via