8ம் தேதி 11 மாவட்டங்களை புரட்டியெடுக்கப்போகும் மழை -வானிலை ஆய்வு மையம் தகவல்.

by Editor / 05-12-2022 06:46:48am
 8ம் தேதி 11 மாவட்டங்களை புரட்டியெடுக்கப்போகும் மழை -வானிலை ஆய்வு மையம் தகவல்.

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via