இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கவாய்ப்பு.
இன்று அந்தமான் கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும். எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Tags :