ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் 185 பேர் பலி
ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டமாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஈரான் அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரகள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 19 பேர் குழந்தைகள் என ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
Tags :