கோயில்களுக்கு சொந்தமான நிலம் முள்வேலி அமைக்கும் பணியில் அறநிலையத்துறை.

அனைத்து கோயில்களிலும் அசையா சொத்துக்களை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு நில அளவை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை நவீன ஜி.ஐ.எஸ். தொழில் நுட்பத்துடன் நில அளவை செய்து வரைபடம் தயாரிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்பேரில் அனைத்து கோயில்களிலும் அசையா சொத்துக்களை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு நில அளவை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் ஜி.ஐ.எஸ். என்ற நவீன தொழில் நுட்பத்தின்படி மேம்பிங் பணியை மேற்கொள்ள அரசு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் வழங்கிய சிபாரிசின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட 200 நில அளவையாளர்களைக் கொண்டு அனைத்து நில அளவை பணிகளும் மேற் கெள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம் நாகேஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் கெட்டி விநாயகர் கோயில், பிரம்மேஸ்வரர் கோயில், கொடுமுடி வட்டம் வரதராஜப் பெருமாள் வகையறாத் கோயில், தூத்துக்குடி மாவட்டம், சங்கர நாராயணசுவாமி கோயில், சங்கரன் கோயில், திருமலைகுமார சுவாமி கோயில், பண்பொழி, சேலம் மாவட்டம், சுகவனேஸ்வரர் கோயில், தேனீ மாவட்டம், ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இது வரை 9,100 ஏக்கர் பரப்பளவு நிலம் அளவீடு செய்யப்பட்டு எச்.ஆர்.சி.இ. என்ற பெயர் இடப்பட்ட நடுக்கல் ஊண்டப்பட்டு அதனை சுற்றி முள்வேலி அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. தற்போது தொடர்மழையின் காரணமாக அளவீடும் பணிகள் தோய்வு ஏற்பட் டுள்ளது. மழை குறைந்தவுடன் இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
Tags :