மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிபிஐயின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சைபர் குற்றப்பிரிவை தொடங்கி வைக்கிறார்.

by Admin / 10-02-2026 10:39:07am
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிபிஐயின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சைபர் குற்றப்பிரிவை தொடங்கி வைக்கிறார்.

இன்று புது டெல்லியில் நடைபெறும் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிபிஐயின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புதிய சைபர் குற்றப்பிரிவை தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழா பாரத் மண்டபத்தில் நடை பெற உள்ளது.  சிபிஐயின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தனிப்பிரிவு சிக்கலான சைபர் குற்றங்கள் மற்றும் எல்லை தாண்டி டிஜிட்டல் மோசடிகளை விசாரிப்பதற்காக அமைக்கப்படவுள்ளது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் தேசிய அளவிலான இந்த s4c டாஸ் போர்டு தொடங்கப்படுகிறது .இது மாநிலங்களுக்கு இடையேயான சைபர் குற்ற தகவல்களை பகிரவும் மோசடிகளை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும் உதவும். மோசடிகளை கையாளுதல் மற்றும் அதன் கட்டமைப்பை சிதைத்தல் என்ற இரண்டு நாள் தேசிய மாநாட்டில் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில், சிறப்பாக பணியாற்றிய சிபிஐ அதிகாரிகளுக்கு அமைச்சர் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். நிகல் நேர பண பரிமாற்ற தடையங்களை கண்டறிதல் ,போலி சிம் கார்டுகளை முடக்குதல், மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் விசாரணைகளை மேம்படுத்துதல் ஆகியவை இம் மாநாட்டின் முக்கிய கருப்பொருளாகும்.

 

Tags :

Share via

More stories