பெருமாள் சிலை மீது அமர்ந்த சாமியாருக்கு அபிஷேகம்

by Staff / 03-07-2024 02:36:06pm
பெருமாள் சிலை மீது அமர்ந்த சாமியாருக்கு அபிஷேகம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூரை சேர்ந்தவர் கோசல்ராம் (வயது 65). இவர் அந்த பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆதிகேசவ பெருமாள் கோவிலை கட்டி நிர்வகித்து வருகிறார். மேலும் அப்பகுதி மக்களுக்கு அருள்வாக்கு கூறி வருகிறார். அந்த அருள்வாக்கு பலித்துள்ளது. இதனால் அங்கு வரும் பக்தர்கள் கூட்டமும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கோவிலில் உள்ள பள்ளி கொண்ட பெருமாள் சிலை மீது கோசல்ராம் உட்கார்ந்து இருக்க, கோவிலின் பூசாரிகள் பால், புனிதநீர், இளநீர், தயிர், மஞ்சள், திருமஞ்சனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அவருக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் அவருக்கு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories