இனி 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்.. மோடி

by Staff / 03-07-2024 02:51:12pm
இனி 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்.. மோடி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் 10 ஆண்டுகால சாதனைகளுக்கான ஒப்புதல் முத்திரை மட்டுமல்ல, இந்தத்
தேர்தலில் நாட்டு மக்கள் தங்கள் எதிர்காலத் தீர்மானங்களுக்கும் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாட்டு மக்கள் எங்கள் மீது ஏக நம்பிக்கை வைத்திருப்பதால், நாட்டின் கனவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், எங்கள் மீது மட்டுமே. மேலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக அரசு தான் மத்தியில் இருக்கும் என மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via