தென்காசி கோவிலை ஆய்வு செய்ய அமைச்சர் வர உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்.

by Editor / 23-02-2025 03:05:52pm
தென்காசி கோவிலை ஆய்வு செய்ய அமைச்சர் வர உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்.

தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயத்தில் ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையில்  இந்த ஆலயத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் 50 சதவிகிதம் நிறை வடையவில்லை என்றும்,கும்பாபிஷகதேதியை மாற்றிவைக்கவேண்டும் ,ஆலயத்திலுள்ள அனைத்து பராமரிப்பு பணிகளையும் முழுமையாக சரிசெய்யவேண்டுமென இந்து அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபுவிடம் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அமைச்சர் சேகர்பாபு விரைவில் தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆய்வு செய்ய வருவதாக தெரிவித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

 

Tags : தென்காசி கோவிலை ஆய்வு செய்ய அமைச்சர் வர உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தகவல்.

Share via