கேரளத்தில்மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ்

by Editor / 11-07-2021 11:16:13am
கேரளத்தில்மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ்

கேரள மாநிலத்தில் கர்ப்பிணியை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக ஜிகா கண்டறியப்பட்ட 14 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தூய்மைபடுத்தும் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo