சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை

by Admin / 25-05-2026 10:59:57am
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்,சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. குழந்தை பெண்கள் பாலியல் வன்கொடுமை இளைஞர்கள் வெட்டிக்கொலை என தினந்தோறும் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் காவல்துறை தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

 மேகதாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ச்சுனா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடனும் ஆலோசனை.

இரண்டு நாளுக்கு முன்பாக  செய்தியாளரிடம் பேசிய கர்நாடகா துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் மேகதாது அணைnவிவகாரத்தில் தலையிடுவதற்கு தமிழக அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் மத்திய அரசு ஒப்புதலுக்குப் பிறகு அணை கட்டப்படுவது உறுதி என்றும் தெரிவித்திருந்தார். மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாநிலம் முழுவதும் வறட்சி அடைந்து விடும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்தன.

 

Tags :

Share via
Logo