குன்னூரில்  125 வது ஆண்டு பாரம்பரிய மலை இரயில் துவக்கப்பட்ட தினம் நாளை.

by Editor / 14-06-2024 10:52:39am
குன்னூரில்  125 வது ஆண்டு பாரம்பரிய மலை இரயில் துவக்கப்பட்ட தினம் நாளை.

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்  ஆட்சி காலத்தில் கடந்த 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் முதன்முதலாக இயக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகே பெர்ன்ஹில் வரை இயக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து 1909 அக்டோபர்  15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. 

1885 ஆம் ஆண்டு ரூ. 5 லட்சம் முதலீட்டில் நீலகிரி மலை ரயில்வே கம்பெனி உருவாக்கப்பட்டது. 1891-ஆம் ஆண்டு சென்னை பிராந்திய ஆளுநர் வென்லாக் பிரபு நீலகிரியில் மலை ரயில் பாதையை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலைப் பாதையில் 27 கி.மீ.க்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டு 1899 ஜூன் 15-இல் திறக்கப்பட்டது.

1908-ஆம் ஆண்டு குன்னூரில் இருந்து ரூ. 24.40 லட்சம் செலவில் 19 கி.மீ.தூரம். உதகைக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த மலை ரயில் பாதையில் 16 குகைகளும், 216 வளைவுகளும், 250 பாலங்களும் உள்ளன. மேலும், ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர் கேஜ் ரயில் பாதைகளில் மிக நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும். ஆங்கிலேயே பொறியாளர் மிக்சல் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு, இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகப் புகழ் பெற்ற நூற்றாண்டு பழைமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை யுனோஸ்கோ நிறுவனம் கடந்த 2005 ஜூலை 15-ஆம் தேதி பாரம்பரிய. ரயிலாக அறிவித்தது இந்நிலையில் 125 ஆம் ஆண்டு துவக்க விழா நாளை கொண்டாட இருக்கிறது.

 

Tags : நீலகிரி மாவட்டம் குன்னூரில்  125 வது ஆண்டு பாரம்பரிய மலை இரயில் துவக்கப்பட்ட தினம்

Share via