இளம்பெண்ணை கடத்த முயற்சி
டெல்லியில் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில், இளம்பெண் ஒருவரை கார் மோதி இழுத்துச் சென்ற சம்பவத்தை மறப்பதற்குள், மற்றொரு சம்பவம் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடவநகரில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணை ரவுடிகள் கடத்த முயன்றனர். காரில் ஏறவில்லை என்றால் ஆசிட் ஊற்றி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆயினும், அந்த இளம்பெண் காரில் ஏறாததால், பலவந்தமாக காரில் ஏற்ற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் இளம்பெண் காயமடைந்தார். காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Tags :