வேலூரில், திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விமர்சித்த விஜய்
இன்று வேலூர் அகரம் சேரியில் நடந்த தமிழக வெற்றிக்காக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. தனக்கான பேருந்துகளில் இன்று பேசிக் கொண்டிருந்த விஜய் இன்று பிரம்மாண்டமான பந்தல் மேடையில் நின்று மீண்டும் திமுக தான் தனக்கு எதிரி என்றும் தன்னை நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் தான் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு மக்களை சந்தித்து நிகழ்ச்சிக்கு எந்த ஒரு நிகழ்வுக்கோ அனுமதி தராமல் பழிவாங்குவது தான் நட்பா என்கிற மாதிரியான கேள்விகளை முன் வைத்ததோடு வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவித்ததோடு ஸ்டாலின் சார், தமிழகத்தை சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருப்பதாக சொல்கிறார். ஆனால் ,காமராஜர் காலத்தில் தான் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது .அண்ணா காலத்தில்தான் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது. எம்ஜிஆர் காலத்தில்தான் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது .ஆனால், இப்பொழுது வெறும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்வாகத்தான் திமுக ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் ஊழல் தான் மலிந்து கிடக்கிறதாகவும் தான் ஒரு ஊழல் அற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியதால் தான் இந்த ஒரே ஒரு விஜய் எதிா்ப்பதற்கு அனைவரும் ஒன்றாக கூட்டணியில் சேர்ந்து கொண்டு எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள். நான் எதற்கும் பயப்படப்போவதில்லை. என் கூட்டணி மக்களோடு தான் என்கிற விதத்தில் பேசியதோடு தான் ஆட்சி அமைத்த உடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த போவதாகவும் தெரிவித்தார். அவர் பேசியதில் சில..
திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விமர்சித்த விஜய்,
வெயிலுக்காகவும் மழைக்காகவும் அறிவாலயம் பக்கம் ஒதுங்கியவர்களை கூட்டடியாக சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கிண்டல் செய்தார்.
விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்தமிழ்நாடு தான் விஜய்
விஜய் தான் தமிழ்நாடு.சில பேர் வாண்டடா வந்து வண்டியில ஏறுறாங்க. இங்கே சீரியஸா இருக்கிற நேரத்துல ஒரே ஒரு போட்டி திமுகவுக்கும் த. வெ. க வுக்கும் தான் போட்டி என்று மற்ற கட்சியினர் விஜய் அரசியல் குறித்து பேசுவதை நையாண்டி செய்தார்.
மின்சார கட்டணத்தை மாதம் தோறும் கணக்கிடுவோம் என்று சொன்னாங்க செஞ்சாங்களா.. ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை கணக்கு எடுத்தால் 100 யூனிட் சுருங்கறது 200 மின்னூட்டக்கு மேல போகும் போது அவங்க கஷ்டப்பட்டு பணத்தை கட்ட வேண்டிய சூழ்நிலை வரும் என்றும்
கிராமப்புறங்களில் மலைப்பகுதிகளிலும் பேருந்து வசதி செய்த தரப்படும்
மாவட்ட கலெக்டர்கள் -மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள் போன்ற வேலை நியமங்களில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். கல்வி நிலையங்களில் தேர்வு இல்லாத செயல்முறை கல்வி முறையை கொண்டு வருவோம்.
என்று பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சுகாதாரமான ரெஸ்ட் ரூம் மூலம் அமைத்து தருவோம்.
போதை பொருள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் .
லாரி டிரைவர்களுக்கு என்று தனி வாரியம் அமைக்கப்படும்.
தென் மாவட்டங்களில் நலனை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
நெசவாளர்கள், மீனவர்களுக்கு தனியாக கவனம் செலுத்தி அவர்கள் நலம் காக்கப்படும் என்றும் தெரிவித்தார்.நிகழ்வின் இறுதியில் தமிழக வெற்றி கழக தலைவருக்கு மாலை அணிவித்து வேலூர் மாவட்ட நிர்வாகி வழங்கிய வெற்றி வீரவேலையும் வீரவாளையும் பெற்றுக் கொண்டார்.
Tags :

















