திருமாவளவன் உருவபொம்மை எரிப்பு.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ததை கண்டித்து புரட்சி புலிகள் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலை அருகே திருமாவளவனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உருவானது.மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருகைக்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டபோது திடீரென திருமாவளவனின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு அதிகரித்தது.
Tags : திருமாவளவன் உருவபொம்மை எரிப்பு.