காங்கோ ஜனநாயகக் குடியரசு- சிலி அணிகளுக்கு இடையேயான சர்வதேச கால்பந்துப் போட்டி ரத்து.

by Admin / 03-06-2026 10:14:18am
காங்கோ ஜனநாயகக் குடியரசு- சிலி அணிகளுக்கு இடையேயான சர்வதேச  கால்பந்துப் போட்டி ரத்து.

காங்கோ ஜனநாயகக் குடியரசு- சிலி அணிகளுக்கு இடையேயான சர்வதேச நட்பு கால்பந்துப் போட்டியை ஸ்பானிய நகர மேயர் ரத்து செய்துள்ளார். ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்று குறித்த சுகாதார கவலைகளுக்கு மத்தியில், போட்டி நடைபெறவிருந்த தெற்கு ஸ்பெயினின் 'லா லினியா டி லா கான்செப்சியன்' நகர மேயர் ஜுவான் பிராங்கோஇந்த அதிகாரப்பூர்வ தடையை விதித்துள்ளார். அந்தலாசிய பிராந்திய அரசாங்கத்தின் சுகாதார சேவைகள் அளித்த கடுமையான எச்சரிக்கை அறிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருதி மேயர் ஜுவான் பிராங்கோ இப்போட்டியைத் தடை செய்யும் அரசாணையில் கையெழுத்திட்டார். அந்தலாசிய பிராந்திய அரசாங்கத்தின் சுகாதார சேவைகள் அளித்த கடுமையான எச்சரிக்கை அறிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருதி மேயர் ஜுவான் பிராங்கோ இப்போட்டியைத் தடை செய்யும் அரசாணையில் கையெழுத்திட்டார்ஜூன் 11 முதல் தொடங்கவுள்ள 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பயிற்சிப் போட்டியாக, இப்போட்டி ஜூன் 9 அன்று ஸ்பெயினில் நடைபெறவிருந்தது.காங்கோ அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐரோப்பிய கிளப் அணிகளில் விளையாடுவதால் அவர்கள் சமீபத்தில் காங்கோ செல்லவில்லை. எனினும், உலகக்கோப்பை விதிமுறைகளின்படி அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன் பெல்ஜியத்தில் 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அமெரிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.காங்கோ அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐரோப்பிய கிளப் அணிகளில் விளையாடுவதால் அவர்கள் சமீபத்தில் காங்கோ செல்லவில்லை. எனினும், உலகக்கோப்பை விதிமுறைகளின்படி அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன் பெல்ஜியத்தில் 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அமெரிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo