2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி அமெரிக்கா நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில்...12.30. மணிக்கு
இன்று நள்ளிரவு பன்னிரண்டு முப்பது மணிக்கு 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி அமெரிக்கா நியூ ஜெர்சி, நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது. நடப்பு உலகச் சாம்பியனான லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணியும் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியும் மோதுகின்றன. 82 ஆயிரம் பேருக்கு அதிகமான ரசிகர்கள் பங்கேற்க கூடிய மைதானத்தில் இப்போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு உலகக்கோப்பை வழங்க உள்ளார். இப் போட்டியில் முதல் முறையாக இடைவேளையின் பொழுது இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், ஜாகிரா ,ஜஸ்டின் ,பீபர் ,மடோனா ,கோல்ட் பிலே ,பி .டி .எஸ். போன்ற உலக நட்சத்திரங்கள் பங்கேற்று இசையை ரசிகர்களுக்கு அள்ளி வழங்க உள்ளனர்.
2026 ஆம் ஆண்டை நினைவு கூறும் விதமாக 2026 மோதிரங்கள் தயார் செய்யப்பட்டு முப்பது வீரர்களுக்கு இந்த மோதிரம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மோதிரங்கள் அனைத்தும் ரசிகர்கள் வாங்கும் பொருட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.
Tags :


















