டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 12-09-2023 01:27:15pm
 டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

குழித்துறை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜோர்ஜ் (வயது 60). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல இடத்தில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று எட்வின் ஜோர்ஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் மனைவி வீட்டுக்கு வந்த போது அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்து மனைவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தி னர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் எட்வின் ஜோர்ஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை எட்வின் ஜோர்ஜ் சிகிச்சை பலனின்றி உயிழிழந்தார். மேலும் இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via