சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 2000 லிருந்து 3000 ஆக உயர்த்தப்படும்-முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

by Admin / 24-01-2026 11:44:24am
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 2000 லிருந்து 3000 ஆக உயர்த்தப்படும்-முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஐந்து திட்டங்களை அறிவித்தாா். தமிழகத்தை குடிசையற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில் ரூபாய் 3,500 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் மூலமாக கட்டப்படும் என்றும் 

ஊரகப்பகுதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை எளிய மக்கள் இத்திட்டத்தின் மீது பலன் பெறுவார்கள் என்றும் இது தவிர தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் இதர வீட்டு வசதி திட்டங்களும் மேம்படுத்தப்பட உள்ளன என்றும் 

தமிழகத்தில் ஊரக பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நோக்கி 1,008 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22,000 கிலோ மீட்டர் நீளம் உள்ள கிராம சாலை அவர்களை தொடர் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 2000 லிருந்து 3000 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பின் போது அவர்களின் பணி அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்  என்றும் மூன்று ஆண்டுகளாக அரசு தயாரித்து கொடுக்கும் அறிக்கையை வாசிக்காமல்  தமிழக ஆளுநர் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via