கார் மோதி ஒருவர் பலி.

by Staff / 23-05-2024 02:06:33pm
கார் மோதி ஒருவர் பலி.

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் இன்று இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் மீது மோதிய நொடியில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via