கருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ-விடம் சிக்கிய பாலியல் கும்பல்

by Staff / 23-05-2024 01:51:10pm
கருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ-விடம் சிக்கிய பாலியல் கும்பல்

கருக்கா வினோத் வழக்கை விசாரித்தபோது என்.ஐ.ஏ-விடம் பாலியல் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசி கைதான ரவுடி கருக்கா வினோத் வழக்கை என்ஐஏ விசாரித்து வந்தது. அதில் கருக்கா வினோத் தொடர்பை ஆராய்ந்தபோது, அவரை முந்தைய வழக்கில் ஜாமீனில் எடுத்தது நதியா என தெரியவந்தது.இந்த நிலையில், நதியா வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியது. அவரிடம் பறிமுதல் செய்த செல்போன்களை ஆராய்ந்தபோது 17 சிறுமிகளின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளன. சிறுமிகளை நதியா பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கு ஒரு திசையில் தொடங்கி மற்றொரு திசை நோக்கி நகர்கிறது.

 

Tags :

Share via
Logo