மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் 1,25,000 வரை உதவித்தொகை திட்டம்

PM யஷஸ்வி ஸ்காலர்ஷிப் யோஜனா 2024-25ன் கீழ், மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
இந்த திட்டத்தில், மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கப்படும். 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.75000 நிதியுதவி வழங்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,25,000 நிதியுதவி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விண்ணப்பிக்கும் மாணவர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் OBC, EBC, DNT, NT அல்லது SNT வகைகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 9ஆம் வகுப்புக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 8ஆம் வகுப்பில் மாணவர்கள் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். 11ஆம் வகுப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Tags :