புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு சிபிஐ சீல்.
புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு சிபிஐ சீல் வைத்துள்ளது. 15 மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசாரணையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் கட்டுமான நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டதாக புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு சிபிஐ சீல்


















