அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 3 பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து ஹாஸ்டல் மற்றும் அறை வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ,இக்கல்லூரிக்கு பொள்ளாச்சி மருத்துமனை மகளிர் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில், கடந்த 30-ம் தேதி விழிப்புணர்வு கிருஷ்ணவேணி தலைமையில் நடத்த பட்டது. அப்போது ,சில மாணவிகள் சோர்வு அடைந்திருத்தை கண்டு விசாரித்த போது மாணவிகள் தங்களுக்கு கல்லூரியில் பாலியல் தொல்லை ஏற்படுவதாக தெரிவித்தனர். சில பேராசிரியர்கள் ,லேப் டெக் னிசியன் போன்றோர் தங்கள் மீது கையை வைப்பதும், தவறாக நடந்து கொள்வதும், வாட்சாப்பில் தவறான மெசேஜ் அனுப்புவதும் போன்ற செயல்களில் ஈடுபாடுவதாக தெரிவித்ததனா்.இதனை, அடுத்து பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி புகார் கொடுத்ததான் பேரில் பொள்ளாச்சி காவல் ஆய்வாளர், இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் பணியாற்றி வந்த தற்காலிக உதவி பேராசிரியர்கள் சதீஷ்குமார், முரளிராஜ், ராஜபாண்டி, லேப் டெக் னிசியன் அன்பரசு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதை உறுதி செய்த பின்னா் மாவட்ட கண்காணிப்பளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வால்பாறை உதவி கண்கணிப்பாளர் தலைமையில் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மேனகா உதவி பேராசிரியர் உட்பட 4 பேரையும் கைது செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் வால்பாறை பகுதியில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் பொது மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி