கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி

by Staff / 18-10-2024 12:50:31pm
கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி

திருப்பூர் ஊத்துக்குளி ஆர்எஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராதா (40). இவர் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சக்தி(17 வயது) என்ற சிறுவனுடன் கடைக்கு சென்றுவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பின்னே வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ராதா உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்த ஊத்துக்குளி போலீசார் காரை ஓட்டிய கார்த்திகேயனை கைது செய்தனர். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo