தினமும் புத்தகத்தை வாசிக்க.... வாசிக்க மனம் மலரும்.
நாளை பள்ளிகள் திறக்க உள்ளன.. பெற்றோர்கள் பரபரப்பிற்கும் மன அழுத்தத்திற்கும் உரிய நிலையில் இருக்கக்கூடிய வேலை இது.. பள்ளி கல்வி கட்டணம், வாகன கட்டணம், யூனிபார்ம், நோட்டுப் புத்தகங்கள் என அடுக்கடுக்காக அவர்கள் மீது இருக்கும் சுமையில் காரணமாக ஒர்அழுத்தமான சூழலும்.... ஒன்றரை மாதத்திற்கு மேலாக விடுமுறையில் இருந்த பிள்ளைகளுக்கு இன்னும் அவர்கள் விரும்பியதை செய்து கொடுக்கவில்லையே என்று கவலையோடும்...... அடுத்தடுத்து செய்ய வேண்டிய கடமைகள் காரணமாகவும் அவர்கள்..... ஒர் இறுக்கமான சூழலில் இருக்க வேண்டிய கட்டம் இப்பொழுது..
இதன் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகள் மீது கோபம் கொள்வதோ, எரிச்சல் அடைவதோ கூடாது.. அவர்களை அவர்கள் போக்கில் இயல்பாக விட்டு விடுங்கள் .அவர்களுக்கான ஒரு வாழ்க்கையை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கக் கூடிய சூழலை காலம் வழங்கும்..
கல்லூரியில் படிக்கின்ற காலம் வரையில் அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவர்களுக்குள்ளும் தங்கள் எதிர்காலம் குறித்த கவலைகளும் கேள்விகளும் இருக்கத்தான் செய்யும். .ஆனாலும் ,நீங்கள் அவர்களை முழுமையாக கண்டு கொள்ளாமல் விட வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு உணர்த்த வேண்டியதை- தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்க நீங்கள் கடமைப்பட்டவர்கள்..
காலம் கடந்து செய்யப்படுகின்ற எந்த செயல்களும் தேவையற்ற பிரச்சனைகளையும் மன வேதனைகளையும் தான் உருவாக்கும்.. அதனால், பிள்ளைகள் அவர்கள் படிக்க வேண்டிய காலகட்டத்திலேயே முழுமையாக படித்து ஒரு நல்ல நிலையை அடையும் வரைக்கும் நீங்கள் கையில் தார் குச்சியை வைத்துக்கொண்டு அவர்களைப் பயமுறுக்கியாகத்தான் வேண்டும்.
.இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சென்று விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.. மன அழுத்தத்தை தரக்கூடிய சூழல்களை உருவாக்கிக் கொடுக்காதீர்கள். எல்லா செயல்களை செய்வது போன்று இயல்பாக அவர்களுடைய எதிர்காலத்திற்கான படிப்பை படிக்க வையுங்கள்
. தினமும் வாசிக்க வாசிக்க மனம் மலரும் என்பதையும் புதிய உலகத்திற்குள் நாம் நுழைகிறோம் என்பதையும் அவர்களுக்கு உணர்த்த தயங்காதீர்கள் .
படிப்பை போன்று அற்புதமான ஒன்று வேறு எதுவும் இல்லை. .அது கொடுக்கின்ற சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது.. ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பின்பு கிடைக்கும் மன எழுச்சி இருக்கிறதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது..
யாருக்கும் தீங்கு செய்யாமல் வாசிக்கிறவனை மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒன்றே ஒன்று இருக்கிறது என்றால் அது புத்தகம் மட்டும் தான்..
புத்தகத்தை நேசிப்பவர்கள் வாழ்க்கை உன்னத நிலைக்கு செல்லும். .
படிப்பை ஒரு இயல்பான ஒன்றாக கருதி படித்தால் ,அதன் மீது வெறுப்பு என்பது ஏற்படாது, பிடிப்பு ஏற்படும். அதனால், பிள்ளைகளை இயல்பாக ஒரு செயலை அன்றாடம் செய்யக்கூடிய செயலை போன்று வாசிக்கிற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள சொல்லுங்கள்
.. இதை நாம் செய்ய தவறிவிட்டால், பின்னால் அவர்கள் படித்து சரியான வேலையை பெறாமலோ ...இல்லை .,அவர்களுடைய இலக்கை சரியான முறையில் அடையாமல் பின்னோக்கி இருந்தாலோ குடும்பத்திற்குள் பிரச்சனைகளையும் மன அழுத்தங்களையும் நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதை நாம் ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும் என்றால் குழந்தைகள் சிறு வயதாக ஏன் கல்லூரி படிப்பு வரை இருக்கின்ற நிலையில் உள்ளவர்களும் சொல்லி பக்குவமாக பேசி அவர்களை நல்வழிப்படுத்த முயலுங்கள். கோபப்படுவதினாலோ,.. எரிச்சல்படுவதினாலோ உங்களுடைய சுமைகளை அவர்கள் மீது ஏற்றி திணித்து வைப்பதின் மூலமாகவோ எதையும் சாதித்து விட முடியாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அதனால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் நேரத்தில் குழந்தைகளை இயல்பாக அவர்கள் போக்கிலே இயங்க வைத்து ,உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிற மாதிரியான ஒரு சூழலை உருவாக்குங்கள்.. அப்பொழுது தான், உங்க பிள்ளைகள் ,நீங்கள் விரும்பிய ஒரு வாழ்க்கையை.... இல்லை, அவர்கள் எதிர்பார்த்த- அவர்கள் கனவு கண்ட ஒரு வாழ்க்கை அடைவதற்கு முடியும்..
Tags :