ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைபலாத்காரம் செய்த 2 காவலர்கள் கைது.

திருவண்ணாமலை அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சுந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியஇரண்டு காவலர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை காவலர்கள் இருவர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண், தக்காளி ஏற்றி வந்த வாகனத்தில் பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. காவலர்களின் இந்த அத்துமீறலுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Tags : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைபலாத்காரம் செய்த 2 காவலர்கள் கைது.